இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பலாக தமிழ் ஈழக் காற்றே என்ற பாடலை கவிபேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடலை விடியோவாக தயாரித்து வைரமுத்து வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு இசையரசன் இசைமைத்துள்ளார். பாடலில் ஈழத்தில் தமிழ் இனத்திற்கு நடந்த அநீதி குறித்து நெருப்பை போல் வரிகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் வைரமுத்து ஈழத்தின் வன்னிக்காடுகளையும், வல்வெட்டித்துறையயையும், முல்லைத் தீவையும் நந்திக்கடலையும்ட, நல்லூர் முருகனையும் குறிப்பிட்டு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடலை வீடியோவை கேட்கும் போது, வெளிநாட்டு வாழ் ஈழத்தமிழர்களின் வலியை அப்படியே வெளிப்படுத்துவது போல் உள்ளது. பாடல் வரிகளை
நாம் நடந்த தெருவில்
நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில்
இருள் மட்டும்
கவிதை பாடிய குயில்கள்
இறந்து போனதடி
காலம் என்னும் நதியோ
வடிந்து போனதடி
கண்ணீர் எரித்த சாம்பல் மட்டும் காற்றில் அலையுதடி
இந்தத் தெருவில் காகம் கரைந்தால்
இசைதான்
இந்தத் தெருவில் புழுதி பறந்தால்
மணம்தான்
இந்தத் தெருவில் வேப்பங் கனியும்
தேன்தான்
இத்தனை மாயம் நிகழ்ந்த காரணம்
நீதான்
காதல் நடந்த வீதியிலே
நடந்து பார்த்தல் கொடுமையே
தேகம் தேடி ஆடை ஒன்று
நடந்து போதல் நரகமே
ஒரு சொல்லும் பேசாமலே
ஊமைக் காதல் முடிந்ததடி- நம்
இதயங்களின் உரையாடலைத்தான்
இந்தத் தெருவே பேசுதடி
சாயம்போன பூக்கள் பூக்கும்
மரங்கங்- நம்
கன்னம் போலக் காரை பெயர்ந்த
சுவர்கள்
திண்ணை எல்லாம் ஓடிப்போன
குடில்கள்
உன்னை என்னைத் தேடிப் பார்க்கும்
தடங்கள்
வீதியிருந்தும் வெறுமையாய்
ஜாதியிருந்தும் தனிமையாய்
இலக்கணத்தில் மட்டும் அல்ல
வாழ்க்கையிலும் ஒருமையாய்
ஒரு சொல்லும் பேசாமலே
ஊமைக் காதல் முடிந்ததடி- நம்
இதயங்களின் உரையாடலைத்தான்
இந்தத் தெருவே பேசுதடி
வைரமுத்து
0 Comments